Nagaratharonline.com
 
எம்.ஏ.எம்.ராமசாமி சதாபிஷேக விழா  Sep 18, 11
 
 
அண்ணாமலை பல்கலைக் கழக இணை வேந்தர் டாக்டர் எம்.ஏ. எம். ராமசாமிக்கு வயது 81. இதையொட்டி சென்னையில் இன்று அவருக்கு சதாபிஷேக விழா நடைபெற்றது. ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள அவரது செட்டிநாடு இல்லம் விழாக் கோலமாக காட்சி அளித்தது. 200-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியர்கள் யாகம் வளர்த்து வேதமந்திரம் ஓதினார்கள். அதன் பிறகு எம்.ஏ.எம்.ராமசாமிக்கு சதாபிஷேக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. விழாவில் மகன் எம்.ஏ.எம்.ஆர்.முத்தையா, உறவினர்கள் குமாரராணி மீனா முத்தையா, ஏ.சி. முத்தையா, எம்.ஏ.எம்.அண்ணாமலை, மத்திய மந்திரி ப.சிதம்பரம், ஆகியோர் குடும்பத்துடன் பங்கேற்றனர்.

வீட்டின் அருகே போடப்பட்டிருந்த மேடைக்கு எம்.ஏ.எம். ராமசாமி வந்து அனைவருக்கும் ஆசி வழங்கினார். அண்ணாமலை பல் கலைக்கழக பேராசிரியர்கள், ஊழியர்கள், செட்டி நாடு சிமெண்ட் நிறுவன ஊழியர்கள் உள்பட ஏராளமானவர்கள் எம்.ஏ.எம். ராமசாமியின் காலில் விழுந்து ஆசி பெற்றனர். ஆயிரக்கணக்கில் பொது மக்கள் திரண்டு வந்ததால் கூட்டம் நிரம்பி வழிந்தது

source : Maalaimalar