Nagaratharonline.com
 
மிளகாய் விலை ரூ.170 ஆக உயர்வு  Sep 18, 11
 
சாப்பிடாமலேயே கண்ணில் நீரை வரவழைக்கும் அளவுக்கு மிளகாய் விலை கிலோ ரூ.170-ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது.


ஏ.சி. குடோன்களில் பதுக்கி வைக்கப்படுவதே இந்த விலை உயர்வுக்கு காரணம் என்று வியாபாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். ஒரு காலத்தில் உணவில் காரத்துக்கு மிளகு அதிகம் பயன்படுத்தப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் மிளகை தங்களது நாட்டுக்கு ஏற்றுமதி செய்து விட்டு, மிளகாயை நம் நாட்டில் அறிமுகப்படுத்தினர். அன்று முதல் இன்று வரை மிளகாய்தான் நமது உணவில் காரப் பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் குண்டு மிளகாய் அதிக அளவில் விளைகிறது. ஆந்திரத்தில் நீள மிளகாய் அதிக அளவில் வருகிறது.
மிளகாய் விலை இப்போது கடுமையாக உயர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு ஒரு கிலோ ரூ. 80 முதல் ரூ. 100 வரை விற்பனை செய்யப்பட்ட முதல் ரக குண்டு மிளகாய் இப்போது ரூ. 170 முதல் ரூ. 190 வரை விற்பனை செய்யப்படுகிறது.

source ; Dinamani