Nagaratharonline.com
 
குன்றக்குடியில் குருபூஜை விழா  Sep 16, 11
 
குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீன குருபூஜை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
காலையில் காளத்திநாதர் சிறப்பு வழிபாடும், சண்முகநாதப் பெருமான் வழிபாடும், குரு முதல்வரின் திருவுருப்படம் திருவீதியுலாவும் நடைபெற்றது.
பின்னர் நடைபெற்ற சிறப்பு சொற்பொழிவுக்கு பொன்னம்பல அடிகளார் தலைமை வகித்தார். பேராசிரியர் எஸ். மோகன் தொடக்க உரையாற்றினார். "கலைமலிந்த சீர்நம்பி' எனும் பொருளில் பேராசிரியர் வே. சங்கரநாராயணனும், "என் உள்ளம்கவர் சந்திப்பு' எனும் பொருளில் பேராசிரியர் பா. நமசிவாயமும் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினர்.

மாலையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் கோட்டையூரைச் சேர்ந்த எல்.பி.வி. வீரப்பச் செட்டியாருக்கு, 32 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்த யாகசாலை அமைத்துக் கொடுத்ததைப் பாராட்டி, "அறமனச் செம்மல்' எனும் பட்டத்தை பொன்னம்பல அடிகளார் வழங்கிப் பேசினார்.
விழாவில், விஞ்ஞானி கே. பாலகிருஷ்ணன், பேராசிரியர் ராம. ராமநாதன், கோவிந்தானந்த சுவாமி, பிள்ளையார்பட்டி கி. பிச்சைக் குருக்கள் உள்ளிட்டோர் பேசினர்.
பேராசிரியர் சொ. சேதுபதி விழாவைத் தொகுத்து வழங்கினார். "அறமனச் செம்மல்' பட்டம் பெற்ற எல்.பி.வி. வீரப்பச் செட்டியார் ஏற்புரையாற்றினார்.

source : dinamani