Nagaratharonline.com
 
தாம்பரம் - திருப்பதி புதிய பஸ் இயக்கம்  Sep 4, 11
 
தாம்பரத்தில் இருந்து திருப்பதிக்கு, நேற்று முதல் புதிய பஸ் சர்வீஸ் இயக்கப்பட்டது. சமீபத்தில், முதல்வர் ஜெயலலிதா தமிழகம் முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் புதிய பஸ்களை இயக்கி வைத்தார்.

இதன் ஒரு வழித்தடமாக, தாம்பரத்தில் இருந்து பூந்தமல்லி, திருவள்ளூர், திருத்தணி வழியாக திருப்பதிக்கு புதிய பஸ் (தடம் எணண்201t) நேற்று முதல் இயக்கப்பட்டது. அமைச்சர் சின்னய்யா, முதல் சர்வீசை நேற்று காலை துவக்கி வைத்தார். பஸ்சில் பயணித்தவர்களுக்கு அமைச்சர் இனிப்புகளை வழங்கினார். இதற்கான நிகழ்ச்சியில் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

source : Dinamalar