Nagaratharonline.com
 
அமராவதிபுதூர் ஊராட்சி :புழுதி பறக்கும் ரோடு, கழிவு நீர் சங்கமம்  Sep 2, 11
 
அமராவதிபுதூர் ஊராட்சி : அமராவதிபுதூர் மெயின் ரோட்டில் வீடுகள், காம்ப்ளக்ஸ் கடைகள் அதிகளவு உள்ளன. வடிகால் வசதி இல்லாததால் கழிவு நீர் ரோட்டில் தேங்கி நிற்கிறது. பராமரிப்பு இன்றி, வாய்க்காலில் முட்புதர்கள் மண்டி கிடக்கின்றன.புதூர் கண்மாய், உய்யக்கொண்டான் கண்மாய், கங்கையடியேந்தல் என 5 பாசன கண்மாய்கள் உள்ளன. எம்.பி., நிதியில் தூர்வாரப்பட்ட கண்மாய்கள், பராமரிப்பின்றி முட்புதர்கள் மண்டி கிடக்கின்றன. கண்மாய் கழுங்குகள் சேதமடைந்து மழை நீர் தேக்க முடியாத நிலை உள்ளது. பெரும்பாலான தெருக்களில் மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளன.

தேவகோட்டை மெயின் ரோட்டை ஒட்டியுள்ள அமராவதிபுதூரில் பஸ் ஸ்டாப் இருந்தும் இந்த வழியாக செல்லும் பெரும்பாலான பஸ்கள் நிறுத்தப்படுவதில்லை. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் அவதிப்படுகின்றனர்.

தேவகோட்டை ரஸ்தா ரயில்வே கேட்டை ஒட்டி மெயின் ரோட்டில் "டாஸ்மாக்' மதுக்கடை உள்ளது. இதனருகே, பள்ளிக்கூடம், கோயில், குடியிருப்பு பகுதிகள் அமைந்திருப்பதால் மாணவர்கள், பெண்கள் தினமும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதை வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு செய்தும் நடவடிக்கை இல்லை.

source : dinamalar