Nagaratharonline.com
 
பிள்ளையார்பட்டியில் ஆக.,31ல் தேரோட்டம்  Aug 28, 11
 
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, வரும் ஆக., 31ல் தேரோட்டமும், சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெறும். இக்கோயிலில் சதுர்த்தி விழா கடந்த ஆக., 23 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை 9.30 மணிக்கு வெள்ளி கேடகத்தில் விநாயகர் வலம் வருவார். இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறும்.தேரோட்டம்: நேற்று, மாலை 5 மணிக்கு யானை முகம் கொண்ட சூரனை விநாயகர் வதம் செய்யும், கஜமுகாசூரசம்ஹாரம் நடந்தது. இன்று மாலை 3 மணிக்கு, தேரோட்டத்திற்கான முகூர்த்தக்கால் நடப்படும்.வரும் 31 அன்று காலை 9.20 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில், கற்பகவிநாயகர் எழுந்தருள்வார். மாலை 4 மணிக்கு தேரோட்டம்நடக்கும். அதைதொடர்ந்து மாலை 4.30 முதல் இரவு 10 மணி வரை ஆண்டிற்கு ஒரு முறை நடக்கும் மூலவர் சன்னதியில் உள்ள கற்பகவிநாயகருக்கு சந்தனகாப்பு அலங்காரம் நடைபெறும்.

source : Dinamalar