Nagaratharonline.com
 
எப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட்?  Aug 28, 11
 
மோட்டார் வாகன நம்பர் பிளேட்கள் என்ன அளவில் இருக்க வேண்டும் என்பது குறித்து, போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

* வாடகைக்கு இயக்கப்படும் வாகனங்களின் பிளேட்கள் மஞ்சள் பின்புறத்தில், கறுப்பு நிறத்தில் எண்கள் இருக்க வேண்டும்.
* சொந்த வாகனங்களில், வெள்ளை பின்புறத்தில் கருப்பு நிறத்தில் எழுத்துக்கள் இருக்க வேண்டும்.
பிளேட் அளவு: * டூ-வீலர் மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் முன்புறம் நம்பர் பிளேட்டின் அளவு 285 மி.மீ., நீளமும், 45 மி.மீ., உயரமும், பின்புறம் 200 மி.மீ., நீளம், 100 மி.மீ., உயரமும் இருக்க வேண்டும்.
* கார் மற்றும் இதர வாகன நம்பர் பிளேட்டின் பின்புறம் 500 மி.மீ., நீளமும், 120 மி.மீ., உயரமும், முன்புறம் 340 மி.மீ., நீளமும், 200 மி.மீ., உயரம் இருக்க வேண்டும்.
* நடுத்தர மற்றும் கனரக வாகனத்தின் நம்பர் பிளேட் 340 மி.மீ., நீளமும், 200 மி.மீ., உயரமும் இருக்க வேண்டும்.
எழுத்துக்கள் அளவு: * 70 சி.சிக்கு கீழ் உள்ள டூ-வீலர் நம்பர் பிளேட் முன்புறம் எழுத்துக்கள் 15 மி.மீ., உயரத்தில், 2.5 மி.மீ தடிமன் மற்றும் இடைவெளியும், பின்புறம், 35 மி.மீ., உயரத்தில், 7 மி.மீ., தடிமன் மற்றும் 5 மி.மீ., இடைவெளியில் எழுத்துக்கள் இருக்க வேண்டும்.
* 70 சி.சிக்கு மேல் உள்ள டூவீலரில், முன்புறம் 30 மி.மீ., உயரத்தில், 5 மி.மீ., தடிமன் மற்றும் இடைவெளியும், பின்புறத்தில் 40 மி.மீ., உயரத்தில், 7 மி.மீ., தடிமன் மற்றும் 5 மி.மீ., இடைவெளியில் எழுத்துக்கள் இருக்க வேண்டும்.
* மூன்று சக்கர வாகனத்தில் 35 மி.மீ., உயரமும், 7 மி.மீ., தடிமன், 5 மி.மீ., இடைவெளி இருக்க வேண்டும். இதர வாகனங்களில் 65 மி.மீ., உயரமும், 10 மி.மீ., தடிமன் மற்றும் 10 மி.மீ., இடைவெளியில் எழுத்துக்கள் இருக்க வேண்டும். இதை மீறும் பட்சத்தில் மோட்டார் வாகன சட்டம் 53ன் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

source : Dinamalar