Nagaratharonline.com
 
BMW கார்கள் சென்னையில் அறிமுகம்  Aug 25, 11
 
BMW இந்தியா நிறுவனம், பீ.எம்.டபிள்யூ எக்ஸ் 3 வரிசையில் இரண்டு புதிய கார்களை அறிமுகம் செய்துள்ளது.சென்னையில், இந்நிறுவனத்தின் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த டீசல் கார்கள், பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளன.

பீ.எம்.டபிள்யூ எக்ஸ் 3 டிரைவ் 20 டீ கார் விலை 41 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயாகவும், பீ.எம்.டபிள்யூ எக்ஸ் 3 டிரைவ் 30 டீ கார் விலை 47 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நான்கு சிலிண்டர் டீசல் என்ஜின், 6.2 வினாடிகளில் 100 கி.மீ., வேகத்தை எட்டும் ஆற்றல், 8 வகையான வேக நிலைகள் உள்ளிட்ட அதி நவீன தொழில்நுட்ப வசதிகள் இந்த கார்களில் உள்ளன.காண்போரை கவர்ந்திழுக்கும் எழிலான தோற்றம், வலிமையான கட்டமைப்பு, மேடு, பள்ளங்களிலும் சொகுசான பயணம் என பல்வேறு வசதிகளுடன் 8 வண்ணங்களில் தயாரிக்கப்படும் இந்த கார்கள், வரும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் விற்பனைக்கு வர உள்ளன.

source : Dinamalar