Nagaratharonline.com
 
ரேஷன் கார்டு விவரங்கள் கம்ப்யூட்டர் மயமாகின்றன  Aug 22, 11
 
ரேஷன் கார்டுகளை ஸ்மார்ட் கார்டுகளாக மாற்றும் திட்டத்தில், போலி கார்டுகளை கண்டறிய முதற்கட்டமாக, பெயர்கள், முகவரி உள்ளிட்ட விவரங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில், ஒரு கோடியே 96 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ளன. இதில், அரிசி வழங்குவதற்கான பச்சை கார்டுகள், 1.84 கோடியும், சர்க்கரைஅதிகம் வழங்க, 10.67 லட்சம் கார்டுகளும், 60 ஆயிரம் போலீஸ் கார்டுகளும், 62 ஆயிரம் கவுரவ கார்டுகளும் உள்ளன. இவற்றில், 8.37 கோடி பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.ஆனால், வேடிக்கை என்னவென்றால், தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையே, 7.21 கோடி தான். இதனால், ஒரு கோடி பேர் வரை ரேஷன் கார்டுகளில், போலியாக பெயர்களை பதிவு செய்துள்ளதாக தெரிகிறது.

போலி ரேஷன் கார்டுகளை ஒழிக்கவும், போலியாக பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்களை நீக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் ஒரு கட்டமாக, அனைத்து ரேஷன் கார்டுகளிலும் பெயர் மற்றும் முகவரி போன்ற விவரங்களை, அந்தந்த மண்டல அலுவலக கம்ப்யூட்டர்களில் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

source ; dinamalar