Nagaratharonline.com
 
ஆகஸ்ட் 22-ம் தேதி- சென்னை தினம் ( Madras Day) கொண்டாட்டம்  Aug 21, 11
 
பழமையான சென்னை, அப்போது, மதராஸப்பட்டணம் என்றே அறியப்பட்டு வந்துள்ளது. பண்டைய மீன்பிடி துறைமுக கிராமமான இப்பகுதி 1200-வது ஆண்டுகளில் தொண்டை மண்டலத்துக்குட்பட்ட பகுதியாக விளங்கியது.
காஞ்சிபுரத்தை தலைமையிடமாக கொண்டு சோழ மன்னர்கள் இப்பகுதியை ஆட்சி செய்த பிறகு, பல்லவர்கள், களப்பிரர்கள், பாண்டியர்கள், நாயக்கர்கள் ஆகிய மன்னர் வம்சத்தினர் ஆட்சி நடத்தி வந்தனர்.
பிறகு, இந்தியாவின் செல்வச் செழிப்பைக் கண்டு 17-வது நூற்றாண்டுகளில் இங்கு வந்த பிரிட்டிஷ்காரர்கள் தங்கள் வியாபார நிறுவனமான கிழக்கிந்தியக் கம்பெனியை சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை பகுதியில் வியாபாரம் செய்வதற்கு, இதனை ஆட்சி செய்து வந்த தர்மலா வெங்கடகிரி நாயுடு என்ற நாயக்க மன்னரிடமிருந்து இப்பகுதிகளை விலைக்கு வாங்கினர்
.வெங்கடகிரி நாயுடுவின் தந்தையான சென்னப்ப நாயுடு என்பவரின் பெயரை அடிப்படையாக கொண்டே இப்பகுதி சென்னைப்பட்டணம் என அப்போது அழைக்கப்பட்டது.பிறகு செயின்ட் ஜார்ஜ் கோட்டையை தலைமையிடமாக்கப்பட்டு சென்னைப் பட்டணத்துக்கு அருகே இருந்த கிராமப் பகுதிகளான திருவொற்றியூர், திருவல்லிக்கேணி, திருவான்மியூர், திருமயிலை (மயிலாப்பூர்) ஆகியவற்றை ஒன்றிணைத்தனர். அப்போது அந்தப் பகுதி "ஒயிட் டவுண்' என அழைக்கப்பட்டது
இதன் பிறகு, மற்ற பகுதிகளும் ஒன்றிணைக்கப்பட்டு 1639-ம் ஆண்டு ஆகஸ்ட் 22-ம் தேதி சென்னை நகரம் (மெட்ராஸ் சிட்டி) உருவாக்கப்பட்டது. இதனை நினைவுக் கூறும் விதமாகவே ஆகஸ்ட் 22-ம் தேதி "சென்னை தினம்' கொண்டாடப்படுகிறது.