Nagaratharonline.com
 
பள்ளிகள் காலாண்டு விடுமுறை 3 நாட்கள் மட்டுமே  Aug 20, 11
 
பள்ளிகள் திறக்க காலதாமதம், பாடங்கள் நடத்தாமை போன்ற காரணங்களால் காலாண்டு தேர்வு விடுமுறை நாட்கள் குறைக்கப்பட்டுள்ளன.தமிழகத்தில் சமச்சீர் கல்வி முறை குறித்த சர்ச்சையால், பள்ளிகள் திறப்பதில் கால தாமதம் ஏற்பட்டது.

இது குறித்த வழக்கு ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் என மாறி மாறி சென்றதால், வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் வரை மாணவர்களுக்கு பாடம் எதுவும் நடத்த முடியவில்லை.சுப்ரீம் கோர்ட் தீர்ப்பிற்கு பின் கடந்த சில நாட்களாக பாடங்கள் நடந்து வருகிறது. இதையடுத்து செப்.,22 முதல் 29 வரை காலாண்டு தேர்வுகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

வழக்கமாக செப். 25க்குள் தேர்வு முடிந்து விடும். எனவே ஒருவாரத்திற்கும் மேல் காலாண்டு விடுமுறை அளிக்கப்படும். தற்போது செப். 29 வரை தேர்வு உள்ளதால், செப்., 30, அக்., 1, 2 ஆகிய மூன்று நாட்கள் மட்டுமே விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அக்., 3 முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என கல்வித்துறை அதிகாரி தெரிவித்தார்.

source ; Dinamalar