Nagaratharonline.com
 
New Land guidline rates for chennai & suburban  Aug 16, 11
 
சென்னை நகருக்குள் நிலத்தை ஒரு சதுர அடி ரூ.4 ஆயிரத்துக்கும், மற்ற மாநகராட்சிப் பகுதிகளில் ஒரு சதுர அடி ரூ.2 ஆயிரத்துக்கும் குறைவாக விற்பனை செய்யக் கூடாது.

இதற்கான விவரங்கள் அக்டோபர் 31-ம் தேதி வெளியிடப்பட இருக்கும் சீரமைக்கப்பட்ட சந்தை வழிகாட்டி மதிப்பில் இடம்பெறக் கூடும் என பதிவுத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பதிவுத் துறை அதிகாரிகள் வசம் இப்போதிருக்கும் வழிகாட்டி மதிப்புகள் மிகவும் பழமையானது. பல ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட அந்த வழிகாட்டி மதிப்புகளுக்கும், இப்போது சந்தை நிலவரப்படி நிலத்தின் மதிப்புக்கும் உள்ள வேறுபாடு என்பது மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசமாக இருக்கிறது.
இதனால், முத்திரைக் கட்டணங்கள் மூலம் அரசுக்குக் கிடைக்க வேண்டிய பெருமளவு வருவாய் குறைந்து கொண்டே வருகிறது.

பதிவுத் துறையின் வழிகாட்டி மதிப்பில், மதுராந்தகத்தில் சதுர அடி, தாம்பரத்தில் ரூ.100-க்கும், அம்பத்தூரில் ரூ.60-க்கும், பூந்தமல்லியில் ரூ.25-க்கும் விற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.நிலங்களின் மதிப்பு உயர்ந்துள்ள நிலையில், மேற்கூறிய ஊர்களில் இப்போது ஒரு சதுர அடி நிலத்தின் விலை ரூ.1000 முதல் ரூ.4 ஆயிரம் வரை விற்கப்பட்டு வருகிறது.
சீரமைப்புப் பணிகள்: சந்தை வழிகாட்டி மதிப்பை சீரமைக்கும் பணியில் பதிவுத் துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். புதிய சந்தை வழிகாட்டி மதிப்பு தமிழகம் முழுவதும் அக்டோபர் 31-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. சென்னை நகருக்குள் ஒரு சதுர அடி நிலத்தை ரூ.4 ஆயிரத்துக்கும் குறைவாக விற்கக் கூடாது என்றும், சென்னையைத் தவிர்த்து பிற மாநகராட்சிகளில் ஒரு சதுர ரூ.2 ஆயிரத்துக்கு விற்க வேண்டும் எனவும் புதிய சந்தை வழிகாட்டி மதிப்பில் தெரிவிக்கப்பட உள்ளது.

நடப்பு நிதியாண்டில் ரூ.8 ஆயிரம் கோடி அளவுக்கு வருவாய் ஈட்ட பதிவுத் துறை இலக்கு நிர்ணயித்துள்ளது.

source : Dinamalar