Nagaratharonline.com
 
புதிய 2 ரூபாய் நாணயத்தால் பொது மக்களுக்கு குழப்பம்  Aug 15, 11
 
இந்திய ரூபாய் குறியீட்டுடன், இந்தாண்டு வெளியான இரண்டு ரூபாய் நாணயம், ஒரு ரூபாய் நாணயத்தைப் போலவே இருப்பதால், பொதுமக்கள் குழப்பம் அடைந்து வருகின்றனர்.

கடந்த 2010ம் ஆண்டு, இந்திய ரூபாய்க்கான புதிய குறியீட்டை, சென்னையைச் சேர்ந்த உதயகுமார் கண்டுபிடித்தார். அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட நாணயங்கள், புதிய குறியீட்டுடன் வெளியாயின. அந்த வரிசையில், இந்தாண்டு புதிய குறியீட்டுடன் கூடிய இரண்டு ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டது.புதிதாக வெளியிடப்பட்ட இரண்டு ரூபாய் நாணயத்தின் முன்பக்கம் சிங்கமுகம் உள்ளது. பின்பக்கம் புதிய குறியீட்டுடன் எண்ணால் "2' என அச்சடிக்கப்பட்டுள்ளது. இரண்டு ரூபாய் நாணயத்தின் முன்பக்கமும், ஒரு ரூபாய் நாணயத்தின் முன்பக்கமும் ஒரே மாதிரியாக உள்ளது.கடைகளில் பொருட்கள் வாங்கும் போதும், சில்லரை மாற்றும் போதும், பலர் இரண்டு ரூபாயை, ஒரு ரூபாய் என நினைத்து ஏமாற்றமடைந்து வருகின்றனர்.

இதனால், நஷ்டமும் அடைந்து வருகின்றனர். இரண்டும் முன்புற தோற்றத்தில், கண்ணுக்குப் புலப்படாத வித்தியாசங்களுடன் ஒரே மாதிரியாக இருப்பதுடன், வட்ட மற்றும் எடை அளவிலும் ஒரே மாதிரியாக உள்ளது. சராசரி மனிதர்களே புதிய இரண்டு ரூபாய் நாணயத்தை கையாள்வதில் ஏமாற்றமடைந்து வரும் நிலையில், பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள், புதிய இரண்டு ரூபாய் நாணயத்தை கையாள்வதில், பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர்

source : Dinamalar