Nagaratharonline.com
 
தேசியக் கொடி பிறந்த கதை  Aug 14, 11
 
தேசிய கொடியை வடிவமைத்தவர் ஆந்திராவைசேர்ந்த பிங்கிலி வெங்கையா. இவர் பிரிட்டிஷ் இந்தியராணுவம் மற்றும் ரயில்வே துறைகளிலும் பணியாற்றினார்.1921ல் இந்திய தேசிய காங்கிரஸ் பொது மாநாடு,காக்கிநாடாவில் நடைபெற்ற போது, காந்தியின் வேண்டுகோளை ஏற்று மூன்று வண்ணங்கள் மற்றும் நடுவே அசோக சக்கரத்துடன் கூடிய தேசியக் கொடியை வடிவமைத்தார். இது விஜயவாடாவில் நடந்த பொது மாநாட்டில் வெளியிடப்பட்டு, தேசிய கொடியாக முன்மொழியப்பட்டது.

கொடுங்கோல் ஆட்சி புரிந்த ஆங்கிலேயர்களின் சகாப்தம், 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி இரவு முடிவுக்கு வந்தது. அன்றைய தினம் இரவு என்ன நடந்தது...

டில்லியில் பார்லிமென்ட் கூடியது. காந்தி, நேரு, மவுண்ட் பேட்டன் உள்பட பல முக்கிய தலைவர்கள் கூடினர். சுதேசா கிருபளானி வந்தே மாதரம் என்ற பாடலை பாடினார். ராஜேந்திர பிரசாத் கூட்டத்தின் தலைமை உரையை வாசித்தார். நள்ளிரவு 12 மணிக்கு இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது. முதல் பிரதமராக நேரு பதவியேற்றார். கவர்னர் ஜெனரல் மவுண்ட்பேட்டன், ஆட்சி அதிகாரத்தை நேருவிடம் ஒப்படைத்தார். ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்ட நேரு, "விதியுடன் ஒரு போராட்டம்' என்ற தலைப்பில் சிறப்பான உரை நிகழ்த்தினார்.

சுதந்திரம் அடைந்த போது, நமது நாட்டின் மக்கள் தொகை 31 கோடியே82 லட்சம். தற்போது இந்தியாவின் மக்கள் தொகை 121 கோடி. அதாவது சுதந்திர இந்தியாவில்90 கோடி பேர் பிறந்துள்ளனர்.

source : Dinamalar