Nagaratharonline.com
 
அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை மூடப்படுகிறது  Aug 12, 11
 
பராமரிப்பு பணிகளுக்காக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள சுதந்திர தேவி சிலை வரும் அக்டோபர் 28ம் தேதியுடன் மூடப்படுகிறது. சுமார் 27 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் இந்த பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. பராமரிப்பு பணிகள் ஓராண்டு காலம் நடக்கவுள்ளன. எனினும் சுதந்திர தேவி சிலை அமைந்துள்ள லிபர்டி ஐலேண்ட் பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டிருக்கும் என அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


source : dinamalar