Nagaratharonline.com
 
சொந்த வீடு வைத்திருப்போருக்கு ஆண்டுக்கு 4 கேஸ் சிலிண்டர்கள் மட்டுமே  Aug 10, 11
 
சொந்த வீடு வைத்திருப்போருக்கு மானிய விலையில் ஆண்டுக்கு 4 கேஸ் சிலிண்டர்கள் மட்டுமே வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

சமையல் கேஸ் விநியோகத்தில் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. சமையல் எரிவாயுவின் அடக்க விலை சிலிண்டருக்கு ரூ. 642. 35 காசு என்ற விலையில் வழங்க வேண்டும் என்று பாராளுமன்ற நிலைக்குழு சிபாரிசு செய்துள்ளது. இதை அப்படியே ஏற்றுக் கொள்ள முடிவு செய்யப்பட்டது. மேலும் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் போன்ற மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் மானிய விலை சிலிண்டர்கள் ரத்து செய்யப்படுகிறது.