Nagaratharonline.com
 
திருமணத்தடையை நீக்கும் வரலட்சுமி விரதம்  Aug 10, 11
 
வரலட்சுமி விரதம் ஆடி மாதம் சுக்லபட்சத்து வெள்ளிக்கிழமையில் அனுஷ்டிக்கப்படுகிறது. எட்டுவகை செல்வங்களுக்கும் அதிபதியான ஸ்ரீமகாலட்சுமியை நினைத்து பூஜை செய்யப்படுவதால் இவ்விரதம் வரலட்சுமி விரதம் என்று பெயர் பெற்றது.

இந்த விரதம் மேற்கொண்டு லட்சுமி தேவியை பூஜை செய்தால் குடும்பத்தில் குதூகலம், நீடித்த ஆயுள், அன்பு, புகழ், அமைதி, இன்பம், ஆரோக்கியம் கிடைக்கும். திருமணமான ஒவ்வொரு பெண்ணும் அவசியம் அனுஷ்டிக்க வேண்டிய விரதம் இது.

சுமங்கலி பெண்களுக்கு மாங்கல்ய பலம் கிட்டும். கன்னி பெண்களுக்கு நல்ல கணவர் அமைவர். இந்த ஆண்டு வரலட்சுமி விரதம் ஆகஸ்டு மாதம் 12-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வருகிறது. அன்றைய தினம் வரலட்சுமி விரதத்தை சந்தியா கால வேளையில் தொடங்க வேண்டும்.

பூஜையை முதல் வெள்ளிக்கிழமை செய்ய வசதி இல்லாதவர்கள் மறு வெள்ளிக்கிழமை செய்ய வேண்டும். வரலட்சுமி விரதம் இருப்பதால் கர்மநோய்கள் நீங்கும். திருமணத்தடை அகலும். குழந்தை செல்வம் உண்டாகும்.

source ; DINAMALAR