Nagaratharonline.com
 
பொன்னமராவதி அழகிய நாச்சியம்மன் கோயில் தேரோட்டம்  Aug 10, 11
 
பொன்னமராவதி அழகிய நாச்சியம்மன் கோயில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் கடந்த 31-ம் தேதி காப்புக் கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது.
தொடர்ந்து, விழா நாள்களில் அம்மனுக்கு பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை கோயிலில் தேரோட்டம் நடைபெற்றது.
பொன்னமராவதி, சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த 1000-க்கும் அதிகமானோர் தேரோட்டத்தில் கலந்து கொண்டனர்.
தேரோட்டத்தையொட்டி, அன்னதானமும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

source : Dinamani