Nagaratharonline.com
 
நச்சாந்துபட்டி நியாய விலைக் கடையில் பொருள்கள் சரிவர விநியோகிப்பதில்லை  Aug 8, 11
 
நச்சாந்துபட்டியில் உள்ள நியாய விலைக் கடையில் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் பொருள்கள் வழங்குவதில்லை என இந்திய மாதர் தேசிய சம்மேளனம் புகார் தெரிவித்துள்ளது.
நச்சாந்துப்பட்டியில் அண்மையில் நடைபெற்ற அந்த சம்மேளனத்தின் ஒன்றிய சிறப்புப் பேரவைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
நமணசமுத்திரத்தில் இருந்து, பனையப்பட்டி வரை உள்ள தார்ச் சாலை குண்டும், குழியுமாக இருப்பதால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
எனவே, மழைக்காலம் தொடங்கும் முன்னர் இந்தச் சாலையைச் செப்பனிட வேண்டும்.
நச்சாந்துபட்டியில் சரிவர எரியாத தெரு விளக்குகளை மாற்றி, புதிய விளக்குகள் பொருத்த வேண்டும். இந்தப் பகுதியில் உள்ள நியாய விலைக் கடையில் ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு உணவுப்பொருள் வழங்குவதற்கு உறுதி செய்யப்பட்டும், 800 குடும்ப அட்டைகளுக்கு மட்டுமே உணவுப் பொருள்கள் வழங்குப்படுகிறது. மேலும். பருப்பு, சமையல் பொருட்கள் சரிவர கிடைக்காத நிலை உள்ளது. இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

source : Dinamani