Nagaratharonline.com
 
பிள்ளையார்பட்டி -குன்றக்குடி சாலையில் மான் அடிபட்டு பலி  Aug 6, 11
 
பிள்ளையார்பட்டியிலிருந்து குன்றக்குடி செல்லும் ரோட்டில்வாகனம் மோதி மான் ஒன்று இறந்து கிடந்தது. நேற்று காலை, குன்றக்குடி ரோட்டில் காயங்களுடன் மான் கிடப்பதாக குன்றக்குடி போலீஸ், வனத்துறையினருக்கு பொதுமக்கள் தெரிவித்தனர்.மானை கைப்பற்றிய வனத்துறையினர் போஸ்ட்மார்ட்டம் செய்து உடலை தீ வைத்து எரித்தனர்.இரவில் ரோட்டை கடக்கும் போது வாகனம் மோதியதில் மான் இறந்திருக்கலாம் என்றும், இறந்த மானின் வயது 3 இருக்கலாம் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.நேற்று மதியம் 11 மணிக்கு வைரவன்பட்டியில் முத்தையா என்பவருக்கு சொந்தமான கரும்பு தோட்டத்தில் மலைப்பாம்பு ஒன்று பெருச்சாளியை பிடித்ததை கிராமத்தினர் பார்த்து, பாம்பை பிடித்தனர்.வனத்துறையினர் மலைப்பாம்பை கைப்பற்றி மானகிரி காட்டில் விட்டனர். இது "வெங்கணத்தி' வகையைச் சேர்ந்த பாம்பு என்றும், 15 அடி வரை வளரக்கூடியது என்றும், கோழி, முயல்,எலி, ஆடு, மான், கன்றுக்குட்டிகளை இரையாக எடுக்கக் கூடியது என்றும், வனத்துறையினர் தெரிவித்தனர்.

source : Dinamalar