Nagaratharonline.com
 
பர்மாவில் நகரத்தார் இழந்த சொத்துக்கள் மீட்பு இயக்கம் - கலந்தாய்வுக் கூட்டம்  Jul 24, 11
 
பர்மாவில் நகரத்தார் இழந்த சொத்துக்கள் மீட்பு இயக்கம் சார்பில் குன்றக்குடியில் சனிக்கிழமை (ஜூலை 23) கருத்தறியும் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது.
நகரத்தார்கள் பர்மாவில் வணிகத்தில் ஈடுபட்டு பர்மாவையும், தாய் மண்ணையும் வளப்படுத்தினர். பின்னர் அரசியல் சூழ்நிலை மாறி, போர் நிகழ்ந்ததால் தம் உடமை களையும், கோயில்களையும் இழந்து தாயகம் திரும்பினர்.
பல மடங்கு மதிப்புடைய அந்த சொத்துகளுக்கான இழப்பீட்டை பெற முயற்சி மேற்கொண்டிருந்தபோது அந்நாட்டில் ராணுவ ஆட்சி தொடங்கியது. அண்மையில் ஜனநாயக நாடாக மாறியிருப்பதால் நகரத்தார்கள் பர்மாவில் இழந்த உடமைகளை மீட்பதற்கான கருத்தறியும் கலந்தாய்வுக் கூட்டத்தை சொத்துக்கள் மீட்பு இயக்கம் சார்பில் குன்றக்குடி கோகுலம் மண்டபத்தில் சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் மாநிலங்களவை உறுப்பினர் இ.எம். சுதர்சனநாச்சியப்பன் கலந்துகொண்டு கருத்துரை வழங்குகிறார். பர்மாவிலிருந்து வந்துள்ள டி. முனியாண்டி, அங்குள்ள தற்போதைய நிலை குறித்து விளக்கிப் பேசுகிறார்.

இக் கூட்டத்தில் பங்கேற்று, பர்மாவில் சொத்துக்களை இழந்த நகரத்தார் மற்றும் அவர்களது வாரிசுதாரர்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம்.


மேலும் விவரங்களுக்கு முனைவர் ஆறு. அழகப்பனை 94441 32112, எஸ். சுப்பிரமணியனை 94446 04040, அரு. நாகப்பனை 90033 26233 என்ற செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

source ; Dinamani