Nagaratharonline.com
 
ஓ.சிறுவயல் ஊராட்சியில் தொடரும் "அவலம்'  Jul 22, 11
 
ஓ.சிறுவயல் ஊராட்சி தலைவராக,சொ.லெ. அழகப்பன்,துணை தலைவராக ரெ.நாராயணன் உள்ளனர்.

முக்கிய பிரச்னை குடிநீர் தட்டுப்பாடு,வடக்கு தெருவில் தெருவிளக்குகள் முற்றிலுமாக எரியவில்லை. நான்கு "டிரான்ஸ்பார்மர்கள்' இருந்தும் குறைந்த மின் அழுத்தம். ஆபத்து ஏற்படுத்தும் வகையில் ஆங்காங்கே தொங்கி கிடக்கும் மின் கம்பிகள். புழுதி கிளப்பும் ரோடுகள். "காவு' வாங்க காத்திருக்கும் பாலங்கள். உய்யக்குண்டான்,பருப்பூரணி,அம்மன் கோயில் ஊரணி,சேங்கை ஊரணி,உப்பூரணி என 6 ஊரணிகள் தூர்வாரப்படாமலும் உள்ளன. போக்குவரத்து மிகுந்த குன்றக்குடி- சிறுவயல் தரைப்பாலம் சேதமடைந்துள்ளது. வீடுகளில் வெளியேறும் கழிவு நீர், மழை நீர் கடந்து செல்வதற்கு முறையான வடிகால் வசதி இல்லை.
மக்கள் எதிர்பார்ப்பு என்ன: எஸ்.சண்முகம்,கூலி தொழிலாளி: இங்குள்ள பல ரோடுகள் குண்டும்,குழியுமாக உள்ளன. மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் ஆபத்து ஏற்படுத்தும் வகையில் மின் கம்பிகள் தாழ்வாக தொங்குகின்றன."டிரான்ஸ்பார்மர்' அடிக்கடி பழுதால் வீடுகளில் "டிவி', மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட மின்சாதனங்கள் அடிக்கடி பழுது ஏற்படுகிறது.
பல மின்கம்பங்கள் சிமென்ட் பூச்சு உதிர்ந்து,விபத்து அபாயத்தில் உள்ளன. பஸ் ஸ்டாண்ட் வசதி இல்லை.

உடனடி தேவை என்ன?
ஊராட்சி அலுவலகம்,வி.ஏ.ஓ., அலுவலகம், குடிநீர் ஊரணி அருகே உள்ள "டாஸ்மாக்' மது கடையை உடனே வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.
சேதமடைந்துள்ள 28க்கும் மேற்பட்ட மின்கம்பங்களை உடனடியாக மாற்ற வேண்டும்.
ஓ.சிறுவயல்- குன்றக்குடி செல்லும் தார்ரோட்டை (கிராமச் சாலை) சீரமைக்க வேண்டும்.
ஆஞ்சநேயர் கோயில் அருகே உள்ள பழுதடைந்த தேனாற்று பாலத்தை சீரமைக்க வேண்டும். தாழ்வாக தொங்கும் மின் கம்பிகளை உடனே சரி செய்ய வேண்டும்.

source ; dinamalar