Nagaratharonline.com
 
சென்னையில் பரவுகிறது புதிய கண் நோய்  Jul 6, 11
 
சென்னை நகரில், புதிய கண் தொற்று நோயால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். "அடினோ' வைரஸ் கிருமி மூலம் பரவக்கூடிய இந்த நோயால்; கண்கள் சிவந்து, அவற்றில் இருந்து தொடர்ந்து நீர் வழியும் கூடவே தொண்டை வலி மற்றும் காய்ச்சலும் இருக்கும். பாதிக்கப்பட்டவர்களிடம் மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை இந்த நோயின் தாக்கம் இருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

இந்த நோய் குறித்து, சென்னை எழும்பூரில் உள்ள அரசு கண் மருத்துவமனை இயக்குனர் வசந்தா, ""தினமும் 10 முதல் 15 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு, இங்கு சிகிச்சைக்காக வருகின்றனர். மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை, இந்த நோய் நீடிக்கும். சிலருக்கு மூன்று வாரங்கள் வரை கூட நீடிக்கும். இதனால், கண் பார்வைக்கு பாதிப்பு இல்லை. ஒருவரிடமிருந்து எளிதில் பரவும் என்பதால், நோயால் பாதிக்கப்பட்டோர் பயன்படுத்திய டவல், சோப்பு போன்றவற்றை மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது. கண்ணில் இருந்து வழியும் நீர் மூலம் பரவும் என்பதால், தலையணை, படுக்கை விரிப்புகளையும் மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது,'' என தெரிவித்தார்.

source : Dinamalar