Nagaratharonline.com
 
பாலசுப்பிரமணியபுரம் என்ற மூலங்குடி மீனாட்சி உடனுறை சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு விழா  Jul 5, 11
 
பொன்னமராவதி ஜூலை 3: பொன்னமராவதி அருகேயுள்ள பாலசுப்பிரமணியபுரம் என்ற மூலங்குடி மீனாட்சி உடனுறை சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தோஷ நிவர்த்தித் தலமாகக் கருதப்படும் இந்தக் கோயிலில் சிவபெருமானின் சன்னதிக்கு வலது புறத்தில் வடக்கு நோக்கி பதினெட்டுத் திருக்கரங்களுடன் காரியசித்தியாக அருள் பாலிக்கும் துர்க்கை அம்மன் சன்னதி உள்ளது.

இதேபோல, ராகு பகவான் துர்காதேவியைப் பார்த்த நிலையில் இருப்பதால் தோஷ நிவர்த்தி தலமாக இந்தக் கோயில் விளங்குகிறது.

இந்தக் கோயிலில் வெள்ளிக்கிழமை கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் மற்றும் முதல்கால யாக பூஜை நடைபெற்றது. சனிக்கிழமை இரண்டாம், மூன்றாம் கால யாக பூஜைகள் நடைபெற்றன.

தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் மீனாட்சி சுந்தரேசுவரர் மற்றும் பரிவார தேவதைகளுக்கு குடமுழுக்கு விழா நடைபெற்றது. விழாவில் சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். விழாவையொட்டி, அன்னதானமும், கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. விழா ஏற்பாடுகளை, ஊரார்கள், நகரத்தார் மற்றும் திருப்பணிக் குழுவினர் செய்திருந்தனர்.


Source:Dinamani