Nagaratharonline.com
 
சிவகங்கை:கோயில்களுக்கு ஐ.எஸ்.ஓ., சான்று: அமைச்சர் பெரியகருப்பன் தகவல்  Nov 11, 09
 
கோயில்களுக்கு ஐ.எஸ்.ஓ., சான்று: அமைச்சர் பெரியகருப்பன் தகவல்

சிவகங்கை:சென்னை கபாலீஸ்வரர், பார்த்தசாரதி, வடபழனி கோயில்களுக்கு உலகத்தரச்சான்று பெற (ஐ.எஸ்.ஓ.,) முயற்சி எடுத்து வருவதாக அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்.சிவகங்கையில் அவர் கூறிய தாவது:அறநிலையத்துறையின் கீழ் 38 ஆயிரத்து 645 கோயில்கள் உள்ளன. கடந்த ஆட்சியில் கோயில் திருப்பணிக் காக 147 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டது.ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 360 கோடி ஒதுக்கி யுள்ளோம். பழநி கோயிலில் பக்தர்கள் பாதுகாப்பாக செல்ல இரண்டாவது "ரோப் கார்' (மோனோ கேபிள் ஜிப் பேக் முறை) அமைக்கப்பட உள்ளது. சோளிங்கநல்லூரில் புதிதாக அமைக்கப்படும். இதற்கு 12 கோடி ஒதுக்கப்பட்டு, ஒரு மாதத்திற்குள் டெண்டர் விடப்படும்.நடப்பு ஆண்டில் பயிற்சி பெற்ற 207 பேர் அர்ச்சகராகியுள்ளனர்.பழநி, திருச் செந்தூர், ராமேஸ்வரம், மதுரை மீனாட்சியம்மன் உட்பட 10 கோயில்கள் சுத்தமாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

உலகத்தர சான்று:சென்னை கபாலீஸ்வரர், பார்த்தசாரதி, வடபழனி முருகன் கோயில்களுக்கு உலகத்தர சான்று (ஐ.எஸ். ஓ.,) பெற முயற்சிக்கிறோம். இந்த ஆண்டு இறுதிக்குள் கிடைத்து விடும். திருத்தணி முருகன் கோயில் கோபுரம் கட்டு மான பணிக்கு 3 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அடிக்கல் நாட்டு விழா ஒரு சில நாட்களில் நடக்கும். ஆதி திராவிடர்கள் பகுதியில் உள்ள 1,000 கோயில் திருப்பணிக்காக தலா 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இதுவரை 20 ஆயிரம் ஆதிதிராவிடர் கோயில்களுக்கு திருப்பணி செய்ய நிதி தரப்பட்டுள்ளது'' என்றார். அறநிலையத்துறை கமிஷனர் சம்பத், கலெக்டர் மகேசன்காசிராஜன், ராஜசேகரன் எஸ்.பி., உடனிருந்தனர்.

Source: Dinamalar 11/11/09