Nagaratharonline.com
 
ஸ்ரீ கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் தங்க ரதப் புறப்பாடு  Jun 13, 11
 
சிவகங்கை, ஜூன் 11: சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டை ஸ்ரீ கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் சனிக்கிழமை இரவு சுவாமி தங்க ரதப் புறப்பாடு நடைபெற்றது.
நாட்டரசன்கோட்டையில் உள்ள சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான ஆளுகைக்கு உள்பட்ட அருள்மிகு கண்ணுடைய நாயகி அம்மன் கோயில் வைகாசி பெருந் திருவிழா ஜூன் 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து நாள்தோறும் சிம்மம், காமதேனு, யானை, வெள்ளி ரிஷபம் என பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.
8-ம் நாள் நிகழ்ச்சியாக சனிக்கிழமை மாலை கண்ணுடைய நாயகி தங்க ரத உள்வீதி புறப்பாடு நடைபெற்றது.
இந் நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான மேலாளர் பா. இளங்கோ, ஆலயக் கண்காணிப்பாளர் பி. சரவணகணேசன், கெüரவ கண்காணிப்பாளர் கே.என். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Source:Dinamani