Nagaratharonline.com
 
பொன்னமராவதி பாலமுருகன் கோயில் குடமுழுக்கு  Jun 13, 11
 
பொன்னமராவதி ஜூன் 12: பொன்னமராவதி பாலமுருகன் கோயில் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பொன்னமராவதி பழனி பாதயாத்திரைக் குழுவினரால் அமைக்கப்பட்ட இந்தக் கோயிலுக்கு 1986-ஆம் ஆண்டு கிருபானந்தவாரியரால் அடிக்கல் நாட்டப்பட்டது.
பின்னர், 26.1.1996-ல் முதல் குடமுழுக்கு நடைபெற்றது. அதன் பின்னர் நிகழாண்டு கடந்த புதன்கிழமை விநாயகர் பூஜை, தனபூஜை, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி நடைபெற்றது.
வெள்ளிக்கிழமை கும்பலங்காரம், முதல் யாகவேள்வி நடைபெற்றது. சனிக்கிழமை இரண்டாம், மூன்றாம் கால வேள்விகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர்க் குடங்களை சிவாச்சாரியர்கள் சுமந்து சென்று காலை 7.45 மணியளவில் கும்பத்தில் ஊற்றி குடமுழுக்கு செய்தனர்.
விழாவில் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவை முன்னிட்டு, அன்னதானமும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
விழா ஏற்பாடுகளை, கோயில் திருப்பணிக் குழுவினரும், பழனி பாதயாத்திரைக் குழுவினரும் செய்திருந்தனர்.

Source:Dinamani