Nagaratharonline.com
 
பாம்புகள் குடியிருக்கும் பூங்கா : தேவகோட்டையில் ரூ.ஒரு கோடி வீண்  Jun 9, 11
 
தேவகோட்டை ராம்நகரில் பல லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பூங்கா பராமரிப்பின்றி முட்செடிகள் வளர்ந்து பயனற்று கிடக்கிறது. தனியார் ஒருவர் பல கோடி ரூபாய் மதிப்பிலான ஊருணியுடன் அமைந்த 15 ஏக்கர் இடத்தை இலவசமாக கொடுத்தார். அந்த இடத்தில் தேசிய சம வளர்ச்சி நிதி, சுற்றுலா வளர்ச்சித் திட்ட நிதி ரூ. ஒரு கோடியே 18 லட்சத்துடனும்,பொது,சிறப்பு நிதி மூலம் சுமார் ரூ. ஒன்றரை கோடியில் அழகிய பூங்கா கடந்த 2009 ல் திறந்து வைக்கப்பட்டது.

நுழைவு கட்டணம் வசூலித்த நிலையிலும் தினமும் ஆயிரக்கணக்கானோர் பொழுது போக்கிற்காக வந்தனர். பூங்காவை நகராட்சியினர் சரியாக பராமரிக்காததால் மக்கள் வருகை குறைந்து விட்டது. சிறுவர்கள் பகுதியும் சிதைந்து, விளக்கே எரியாமல் இருளாக உள்ளது. இருட்டை பயன்படுத்தி குடிமகன்கள் பூங்காவை திறந்தவெளி பாராக மாற்றி விட்டனர். இங்கு அமைக்கப்பட்ட பொம்மைகளை மறைக்கும் அளவிற்கு முட்செடிகள் வளர்ந்துள்ளது. முட்செடிகளுக்குள் பாம்புகளும் ஏராளமாக காணப்படுகிறது. பராமரிக்கப்படாமல் இருக்கும் இந்த பூங்காவை தனியாரிடமாவது பராமரிக்க விட்டால் அதன் மூலம் நகராட்சிக்கு வருமானமும் கிடைக்கும். வற்றாமல் இருக்கும் ஊருணியில் படகு சவாரிக்கும் ஏற்பாடு செய்யலாம்.

source : Dinamalar