Nagaratharonline.com
 
அடிப்படை வசதி இல்லாத மதகுபட்டி வாரச்சந்தை  May 31, 11
 
மதகுபட்டி வாரச்சந்தை அடிப்படை வசதியின்றி சுகாதார கேடாக காணப்படுகிறது. மதகுபட்டி வாரச்சந்தைக்கு அலவாக்கோட்டை,அழகமாநகரி,ஏரியூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களுக்குதேவையான காய்கறிகளை வியாழன் தோறும் கூடும் சந்தையில் வாங்குகின்றனர். சந்தை நடக்கும் இடத்தில் எந்த கட்டமைப்பு வசதியும் செய்யப்படவில்லை. மக்கள் நடந்து செல்வதற்கு கூட இடம் இல்லாமல் பொருட்கள் வைத்து கடை நடத்தப்படுகிறது. இரு சக்கர வாகனங்களை அனைத்து இடங்களிலும் நிறுத்துவதால் பொருட்களை வாங்க முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். மேலும் சந்தை முடிந்த பின் குப்பைகளை அள்ளாமல் அப்படியே விட்டுச் செல்வதால் துர்நாற்றத்துடன் நோய் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியில் ரேஷன் கடை,வி.ஏ.ஒ அலுவலகம்,தனியார் மருத்துவமனை உள்ளதால் சந்தை முடிந்த மறுநாள் இப்பகுதியில் மக்கள் நடப்பதற்கே சிரமப்படுகின்றனர்.ஊராட்சியினர் கடைகளுக்கு வாடகை மட்டுமே வசூல் செய்வதோடு நிறுத்திக்கொள்கின்றனர். அடிப்படை வசதிகளை செய்து இப்பகுதியை சுத்தமாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


source : Dinamalar