Nagaratharonline.com
 
28ம் தேதி முதல், கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்  May 25, 11
 
டூவீலரில் செல்வோர், 28ம் தேதி முதல், கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். விதிமுறையை சரியாக பின்பற்றாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, போக்குவரத்து காவல் துறை உத்தரவிட்டுள்ளது. விபத்துகளில் இருந்து தப்ப, ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என, அரசு கிடுக்கிப்பிடி நடவடிக்கைகள் எடுத்தாலும், டூவீலரில் வாகன ஓட்டிகள் அலட்சியம் காட்டுவதால் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இம்மாதம் 28ம் தேதி முதல் டூவீலரில் செல்வோர் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டுமென, தமிழக போக்குவரத்து காவல் துறை அறிவுறுத்தியுள்ளது. மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது

போக்குவரத்து விதிமுறைகளை, நவீன வகையில், கண்காணிக்க வேண்டும் என்பதற்காக போக்குவரத்து போலீசார்
"இ-சலான்' என்ற முறையை அறிமுகம் செய்துள்ளனர். இது, 15 நாட்களில் நடை முறைக்கு வரவுள்ளது. "இ-சலான்' என்பது, பிளாக்பெர்ரி மொபைலுடன் பிரின்டர் இணைக்கப்பட்டிருக்கும். ஒருவர் முதல்முறையாக போக்குவரத்து விதிமுறையை மீறும் போது அவரின் வாகன எண் சர்வரில் பதிவாகிவிடும். அவர் மீண்டும் விதிமுறையை மீறும் போது, ஏற்கனவே செய்த தவறையும், சர்வர் மூலம் அறிய முடியும். இதுபோல, நான்கு முறைக்கு மேல் தொடர்ந்து, தவறு செய்தால் அவர் மீது மேல் நடவடிக்கை கடுமையாக இருக்கும்.

source : Dinamalar