Nagaratharonline.com
 
கொப்புடையநாயகியம்மன் கோயில் திருவிழா தெப்ப உற்சவம்  May 21, 11
 
காரைக்குடி, மே 20: சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் அருள்மிகு ஸ்ரீ கொப்புடையநாயகியம்மன் கோயில் வைகாசித் திருவிழாவையொட்டி, வியாழக்கிழமை இரவு அம்மன் எழுந்தருளிய தெப்ப உற்சவம் நடைபெற்றது.

இக் கோயிலில் மே 10-ந் தேதி காப்புக் கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது.

அதையொட்டி, அம்மனுக்கு நாள்தோறும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

கடந்த செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

திருத்தேர் காரைக்குடியிலி ருந்து தேரோடும் வீதி, தெற்குத் தெரு வழியாக காட்டம்மன் கோயிலைச் சென்றடைந்தது. அங்கிருந்து புதன்கிழமை தேர் மீண்டும் கொப்படையம்மன் கோயிலை வந்தடைந்தது.

அதைத் தொடர்ந்து அம்மனுக்கு தீபாராதனைகள் நடைபெற்றன.

வியாழக்கிழமை இரவு அலங்கரிக்கப்பட்ட தெப்ப உற்சவம் நடைபெற்றது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.

குளத்தில் தெப்பம் 3 முறை வலம்வந்தது.

விழாவில், கோயில் நிர்வாக அதிகாரி, விழாக் குழுவினர், நகரத்தார்கள், நாட்டார் கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Source:Dinamani