Nagaratharonline.com
 
திருச்சி BHEL-ல் 475 ஆர்ட்டிசான் பணியிடங்கள்  May 18, 11
 
பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில்(BHEL) ஆர்டிசான் பணிக்கு ஏற்பட்டுள்ள 475 காலியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


விளம்பர எண்: 290

பணியின் பெயர்: ஆர்டிசான்

காலியிடங்கள்: 475(பொது-250, ஒபிசி-129, எஸ்.சி}91, எஸ்.டி-5) முன்னாள் ராணுவ வீரர்களுக்கு 68 காலியிடங்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு 14 காலியிடங்களும் (VC-4, HI-5, LM-5) ஒதுக்கப்பட்டுள்ளது.

காலியிடங்கள் துறை வாரியாக:

பிட்டர் - 200

வெல்டர் - 130

கிரேன் ஆப்ரேட்டர் கம் ரிகர் - 110

எலக்ட்ரீசியன் - 20

பர்னஸ் ஆப்ரேட்டர் - 10

பிளம்பர் - 5

வயதுவரம்பு: 01.05.2011 தேதியின்படி 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.01.051984 -க்கும் 01.05.1933 -க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்தவராக இருக்க வேண்டும். எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 வருடங்களும், ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்களும், முன்னாள் ராணுவ வீரர்களுக்கு அரசு விதிகளுக்குட்பட்ட தளர்வும் வழங்கப்படும்.

சம்பளவிகிதம்: ரூ.11,750 - 23,000.

கல்வித்தகுதி: 1. பிட்டர்: 10-ம் வகுப்பு தகுதியுடன் பிட்டர்/ ஷூட் மெட்டல் ஒர்க் டிரேடுகளில் குறைந்தது 60% மதிப்பெண்களுடன் NTC (National Trade Certificate), NAC (National Apprentice Certificate) பெற்றிருக்க வேண்டும்.

2. வெல்டர்; எலக்ட்ரீசியன், பிளம்பர்: 10-ம் வகுப்பு தகுதியுடன் சம்பந்தப்பட்ட டிரேடில் குறைந்தது 60% மதிப்பெண்களுடன் NTC (National Trade Certificate), NAC (National Apprentice Certificate) பெற்றிருக்க வேண்டும்.

3. கிரேன் ஆப்ரேட்டர் கம் ரிகர்: 10-ம் வகுப்பு தகுதி உடன் மெக்கானிக் (மோட்டார்) டிரேடில் குறைந்தது 60% மதிப்பெண்களுடன் NTC (National Trade Certificate), NAC (National Apprentice Certificate) பெற்றிருக்க வேண்டும்.

4. பர்னல் ஆப்ரேட்டர்: 10-ம் வகுப்பு தகுதியுடன் போர்ஜர் மற்றும் ஹீட் ரீட்டர் டிரேடில் குறைந்தது 60% மதிப்பெண்களுடன் NTC (National Trade Certificate), NAC (National Apprentice Certificate) பெற்றிருக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்டுள்ள தகுதிகளில் எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 55% மதிப்பெண்கள் போதுமானது.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஒரு வருட பயிற்சிக்கு பின் நிரந்தரமாக பணியமர்த்தப்படுவர்.


விண்ணப்ப கட்டணம்: ரூ.125. இதனை சம்பந்தப்பட்ட இணையதளத்திலிருந்து செல்லானை பதிவிறக்கம் செய்து ஏதேனும் ஒரு எஸ்பிஐ கிளை வழியாக BHEL பவர் ஜோதி கணக்கிற்கு (Account No 30796267034 ) ME, Kailasapuram, Trichy-14 (Code No.01363) Bharat Heavy Electrical Limited, Tiruchirappalli என்ற பெயரில் செலுத்த வேண்டும். செலுத்திய பின் கிடைக்கும் செல்லானில் ஜேனல் எண் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை: http:// careers. bhel.in என்ற இணையதளத்தின் மூலம் 11.05.2011 தேதியிலிருந்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் வழிமுறைகள் பற்றிய விவரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் சம்மந்தப்பட்ட சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:


Deputy General Manager (HR),

HRM Department Building 24,

Bharat Heavy Electricals limited, Tiruchirappalli - 620014.

மேலும் விவரங்களுக்கு http:// careersbhel.in இணையதளத்தை பார்க்கவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் சென்றடைய கடைசி நாள்: 01.06.2011


source ; Dinamani