Nagaratharonline.com
 
காரைக்குடி அழகப்பா மெட்ரிக். பள்ளி மாணவிகள் சாதனை  May 10, 11
 
பிளஸ் 2 பொதுத் தேர்வில் காரைக்குடி அழகப்பா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் சிவகங்கை மாவட்ட அளவில் முதல் 2 இடங்களையும், தேவகோட்டை கல்வி மாவட்ட அளவில் முதல் 3 இடங்களையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இப்பள்ளி மாணவி ஏஎன். மீனாட்சி 1200-க்கு 1178 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள்: தமிழ்-193, ஆங்கிலம்-185, பொரு ளாதாரம்-200, கணக்குப் பதிவியல்-200, வணிகவியல்-200, வணிக கணிதம்-200 மொத்தம்1178. மீனாட்சியின் தந்தை ஆர்எம்.அண்ணாமலை சிட்டி யூனியன் வங்கியில் துணைமேலாளராகப் பணியாற்றி வருகிறார். தாயார் விஜயா இதே பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றுகிறார்.

மாணவ, மாணவிகளைப் பள்ளியின் தாளாளர் டாக்டர் உமையாள் ராமநாதன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

source : Dinamani