Nagaratharonline.com
 
பட்டமங்கலத்தில் குருபெயர்ச்சி சிறப்பு பூஜை  May 7, 11
 
பட்டமங்கலத்தில் அஷ்டமாசித்தி தட்சணாமூர்த்தி கோயிலில்
குருப்பெயர்ச்சியை முன்னிட்டு திங்கள்(9ம்தேதி) அதிகாலை 1.05 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். பட்டமங்கலம் ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் குருபகவான் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். சிவன் குருவாக அவதாரமெடுத்து கன்னிமார்களுக்கு சாப விமோசனம் அளித்த தலமாகும்.

மே 9ம் தேதியன்று அதிகாலை 1.05 மணிக்கு குருப்பெயர்ச்சி மீனத்திலிருந்து மேஷத்திற்கு நடைபெறுகிறது. மே 9 ம் தேதி அதிகாலை 1.05 மணிக்கு தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெறும். தொடர்ந்து வெள்ளி அங்கி அணிந்து தட்சிணாமூர்த்தி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

source : Dinamalar