Nagaratharonline.com
 
வள்ளல் அழகப்பச் செட்டியார் சிலை திறப்பு விழா  Apr 29, 11
 
காரைக்குடி-கோட்டையூர் ஸ்ரீ ராம்நகர் ரயில்வே கேட் அருகே அழகப்பா பல்கலை. மேலாண்மையியல் துறை வளாகம் எதிரே கல்லூரிச் சாலையில் வள்ளல் அழகப்பரின் முழு உருவ வெண்கலைச் சிலை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை (மே 1) நடைபெறுகிறது.

இதுகுறித்து பாரிநகர் நலச் சங்க வள்ளல் அழகப்பர் சிலை அமைப்புக் குழு ஆலோசகர் பேராசிரியர் அய்க்கண் கூறியது:÷இச் சாலையில் வள்ளல் அழகப்பருக்கு முழு உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. மே 1-ம் தேதி மாலையில் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் சிலையைத் திறந்துவைத்து சிறப்புரையாற்றுகிறார். அழகப்பா என்ற பெயரிலான நூலைக் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வெளியிட்டுப் பேசுகிறார்.

விழா ஏற்பாடுகளை வள்ளல் அழகப்பர் சிலை அமைப்புக் குழுவினர் செய்து வருகின்றனர் என்றார்.

source : Dinamani