Nagaratharonline.com
 
கோவை - சென்னை  Apr 25, 11
 
கோவை மக்களுக்கு மகிழ்வூட்டும் செய்தியாக, "துரந்தோ எக்ஸ்பிரஸ்' ரயிலில் மூன்று பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட்டு, 201 இருக்கைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன.

கோவை - சென்னை இடையிலான "துரந்தோ எக்ஸ்பிரஸ்' ரயில், செவ்வாய்க்கிழமை தவிர வாரத்தின் அனைத்து நாட்களிலும் இயக்கப்படுகிறது. சென்னையிலிருந்து காலை 6.50 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.30மணிக்கு கோவை வந்தடையும் இந்த ரயில், மாலை 3.05மணிக்கு மீண்டும் புறப்பட்டு, இரவு 9.50 மணிக்கு சென்னை சென்றடைகிறது.ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் மட்டும் ஐந்து நிமிடம் நின்று செல்லும் இந்த ரயில், . முதல் வகுப்புக்கு 1,235 ரூபாயும், "ஏசி' சேர் காருக்கு 610 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. மொத்தம் 480 பொது ஒதுக்கீடு இருக்கை உட்பட 515 இருக்கைகள் இருந்தன.

ஏப்.,21 முதல் இந்த ரயிலில் கூடுதலாக மூன்று பெட்டிகளை இணைத்து, தென்னக ரயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த 3 பெட்டிகளும், சாதாரண "ஏசி' சேர் கார் பெட்டிகளாக இணைக்கப்பட்டுள்ளன. ஒரு பெட்டியில் 67 பேர் வீதமாக, மூன்று பெட்டிகளிலும் சேர்த்து 201 இருக்கைகள் கூடுதலாக இந்த ரயிலில் சேர்க்கப்பட்டு இருப்பதால், இன்னும் அதிகமான மக்கள் பயன் பெறும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

source ; Dinamalar