Nagaratharonline.com
 
காரைக்குடி ஸ்டேஷனுக்கு டவுன் பஸ் வசதி தேவை  Apr 17, 11
 
காரைக்குடி வரும் ரயில் பயணிகளின் வசதிக்கென,ரயில்வே ஸ்டேஷனில் இருந்து பஸ் ஸ்டாண்டுகளுக்கு, டவுன் பஸ்களை இயக்க அரசு போக்குவரத்து கழகம் முன்வரவேண்டும்.

இங்கு பல்கலை, கல்லூரிகள், தனியார் கல்வி நிறுவனங்கள், மத்திய அரசு அலுவலகங்கள் உள்ளன. இதில், சிவகங்கை, மானாமதுரை, திருச்சி, புதுக்கோட்டை, அறந்தாங்கியை சேர்ந்தவர்கள் பணியாற்றுகின்றனர். கல்விக்காக ஆயிரக்கணக்கான மாணவர்கள் இங்கு வருகின்றனர். வெளியூர் பயணிகள், மாணவர்கள் காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனில் இருந்து புது மற்றும் பழைய பஸ் ஸ்டாண்டுகளுக்கு செல்ல போதிய பஸ் வசதி இல்லை. அரசு போக்குவரத்து கழகமும், பஸ் வசதிகள் செய்யவில்லை.

இதனால், ரயிலில் வரும் பயணிகள் 5 கி.மீ.,தூரம் நடக்கவேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதில், மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அரசு ஊழியர்,மாணவர்களின் நலன் கருதி அரசு போக்குவரத்து நிர்வாகம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து கல்லூரி சாலை, சுப்பிரமணியபுரம், புது பஸ் ஸ்டாண்ட், நூறடி ரோடு, செக்காலை ரோடு வழியாக பழைய பஸ் ஸ்டாண்ட் வரை டவுன் பஸ்கள் இயக்கவேண்டும்.

source : Dinamalar