Nagaratharonline.com
 
திருச்சி - பெங்களூரு சிறப்பு ரயில் இயக்கம்  Apr 10, 11
 
திருச்சியிலிருந்து பெங்களூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் கடந்த 4ம் தேதியிலிருந்து ஜூன் 6ம் தேதி வரை உள்ள அனைத்து திங்கள் கிழமைகளிலும் இயக்கப்படுகிறது.
திருச்சியிலிருந்து திங்கள் கிழமை தோறும் இரவு 11.30 மணிக்கு புறப்படும் ரயில் (எண்: 06804) மறுநாள் செவ்வாய் கிழமை காலை 10 மணிக்கு பெங்களூரு சென்றடையும். இது கடந்த 4ம் தேதி முதல் ஜூன் 6ம் தேதி வரை இயக்கப்படும்.
எதிர் வழித்தடத்தில் கடந்த 5ம் தேதி முதல் ஜூன் 7ம் தேதி அனைத்து செவ்வாய் கிழமைகளிலும் இயக்கப்படும். பெங்களூருவிலிருந்து செவ்வாய் கிழமை பகல் 11.15 மணிக்கு புறப்படும் ரயில் (எண்: 06803) அன்று இரவு 9.30 மணிக்கு திருச்சி வந்து சேரும். இந்த ரயில் திருச்சி கோட்டை, குளித்தலை, கரூர், புகளூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, ஓசூர், பைப்பனஹள்ளி, பெங்களூரு கன்டோன்மென்ட் ஆகிய ரயில்வே ஸ்டேஷன்களில் நின்று செல்லும்

source : Dinamalar