Nagaratharonline.com
 
திருப்பரங்குன்றம் கோயில் கும்பாபிஷேக பணிகளுக்காக மூலஸ்தானம் மூடல்  Apr 10, 11
 
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேக பணிகளுக்காக நேற்றுமுன்தினம் முதல், மூலவர்கள் சன்னதி மூடப்பட்டது. ஜூன் 6 கும்பாபிஷேகத்தன்று திறக்கப்படும். கோயிலில் ஐந்து கோடி செலவில் கும்பாபிஷேக பணிகள் நடக்கிறது.

மூலஸ்தானத்தில் பணிகள் துவக்குவதற்காக, நேற்று காலை நான்காம்கால யாகசாலை பூஜைகள் நடந்தன. சண்முகர் சன்னதியில், அத்தி மரத்தில் வடிவமைக்கப்பட்ட மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, நாரதர், பவளக்கனிவாய் பெருமாள், கோவர்த்தனாம்பிகை உருவங்களில், "சக்தி கலை ஏற்றம்' செய்து, புனிதநீர் அபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகம் நடக்கும் ஜூன் 6வரை, இந்த மூலவர்களின் உருவங்களுக்கே நடக்கும். மூலவர் கரத்தில் இருந்த வேல்,சண்முகர் சன்னதியில்வைக்கப்பட்டுள்ளது. பாலாபிஷேகம் அந்த வேலுக்கு நடக்கும்.

மூலஸ்தானத்தில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை.மகா மண்டபத்தில் இருந்த, நடராஜர், சிவகாமி, அஸ்தர தேவர், வள்ளி, தெய்வானையுடன், சண்முகர் விக்ரகங்கள், உற்சவர் சன்னதிக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு வழக்கம் போல் பூஜைகள், பக்தர்களின் திருமணங்கள் நடக்கும்

source : Dinamalar