Nagaratharonline.com
 
ஏப்.,16ல் மீனாட்சி திருக்கல்யாணம்: வெப்சைட்டிலும் நேரடி ஒளிபரப்பு  Apr 5, 11
 
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ஏப்.,16 காலை 10.30 முதல் 10.59 மணிக்குள் நடக்கிறது. இதற்காக மணமேடையிலும், பழைய திருக்கல்யாண மண்டபத்திலும் 2.50 லட்சம் ரூபாய் செலவில் மலர் அலங்காரம் செய்யப்படுகிறது.

இதற்கான ஏற்பாடுகள் குறித்து, கோயில் நிர்வாக அதிகாரி பத்மநாபன் கூறியதாவது :
பெங்களூரூ, ஊட்டியிலிருந்து மலர்கள் வரவழைக்கப்படவுள்ளன. திருக்கல்யாணத்தை காண 20 ரூபாய்க்கு அனுமதி சீட்டு வழங்கப்படும். ஆடிவீதிகள், சித்திரை வீதிகளில் திருக்கல்யாணம் அகன்ற திரையிலும், கோயில் வெப்சைட்டிலும் (www.maduraimeenakshi.org) நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். மேற்காடிவீதி, வடக்காடிவீதியில் மின்விசிறியுடன் பந்தல் மற்றும் கிழக்காடிவீதியில் 50 மீட்டருக்கு பந்தல் அமைக்கப்படும்.

ஆன்மிக சொற்பொழிவாளர் சுகி.சிவத்தின் சிறப்பு சொற்பொழிவுக்கும், வர்ணனைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மொய் பணம் ரூ.10 வழங்குபவர்களுக்கு திருமாங்கல்யப் பிரசாதமும், அனைவருக்கும் கோயில் சார்பில் அன்னதானம் வழங்கப்படும். தங்க ரிஷப வாகனம் உலா : ஏப்.,12 ல் மாலை 6 மணிக்கு யானை மகால் முன், திருஞானசம்பந்த பெருமான் சைவ சமயத்தை நிலைநாட்டிய வரலாறு தல ஓதுவரால் சொல்லப்படும். இதைதொடர்ந்து, சுவாமி சோமாஸ்கந்தர் புதிதாக வடிவமைக்கப்பட்ட தங்க ரிஷப வாகனத்திலும், மீனாட்சி அம்மன் வெள்ளி ரிஷபவாகனத்திலும் மாசி வீதியில் உலா வருவர், என்றார்

source : Dinamalar