Nagaratharonline.com
 
திருச்சி - சென்னை விமான சேவை : கட்டணம் 2,780 ரூபாய்  Mar 28, 11
 
திருச்சி - சென்னை இடையே "ஜெட் ஏர்வேஸ்' விமான சேவை நேற்று முதல் துவங்கப்பட்டது.
திருச்சியிலிருந்து சென்னைக்கு நாள்தோறும் மதியம் 2.05 மற்றும் இரவு 8.45 மணிக்கு புறப்படுவது போல, "ஜெட் ஏர்வேஸ்' விமான சேவையை அந்நிறுவனம் துவக்கியுள்ளது. நேற்று திருச்சி விமான நிலையத்தில் இருந்து மதியம் 2.05 மணிக்கு, சென்னைக்கு முதல் விமான சேவை துவக்கப்பட்டது. நிகழ்ச்சியில் விமான நிலை கட்டுப்பாட்டாளர் தர்மராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
"ஜெட் ஏர்வேஸ்' நிறுவன மண்டல பொதுமேலாளர் கிரி கூறியதாவது: திருச்சியிலிருந்து சென்னைக்கு இன்று (நேற்று) முதல் விமான சேவை துவக்கப்படுகிறது. நள்தோறும் மதியம், இரவு திருச்சியிலிருந்து விமானம் புறப்படும். இந்த விமானம் புறப்படுவதுக்கு முன் சென்னையிலிருந்து திருச்சி வரும். ஏ.டி.ஆர்., ரகத்தைச் சேர்ந்த இந்த விமானத்தில் 62 "சீட்'கள் உள்ளன. முதல் நாளில் 40 சதவீதம் "சீட்'களில் பயணிகள் உள்ளனர். பயணத்துக்கான உடனடி கட்டணம் 2,780 ரூபாய்.

source : Dinamalar