Nagaratharonline.com
 
குளிர்பானத்தில் மிதந்த கம்பளிப்பூச்சி  Mar 26, 11
 
மதுரை அவனியாபுரம் பெரியார் நகரை சேர்ந்தவர் சரவணக்குமார் (24). "ஏசி' மெக்கானிக். இவரும், இவரது நண்பரும் கடந்த ஜன.,25ல் மேலப்பொன்னகரம் மதி காபி பாரில் "செவனப்' கம்பெனியின் "நிம்பூஸ்' குளிர்பானம் 500 மி., பாட்டில் இரண்டு வாங்கினர். அதில் ஒன்றை திறந்து சரவணக்குமார் குடித்தார். தொண்டை குழிக்குள் ஏதோ ஒரு பொருள் தட்டுப்படுவது போல் உணர்ந்து வாந்தி எடுத்தார். அதில் கம்பளிப்பூச்சி கிடந்தது. நண்பர் வைத்திருந்த திறக்கப்படாத குளிர்பானத்திலும் கம்பளிப்பூச்சி செத்து மிதந்தது.

சரவணக்குமாருக்கு தொடர்ந்து வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால், அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். வீட்டிற்கு வந்ததும் வயிற்றோட்டம், வாந்தி நிற்கவில்லை. தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மன உளைச்சல், மருத்துவ செலவுக்காக செவனப் கம்பெனியின் மும்பை ஆராதனா புட்ஸ் அண்ட் ஜூஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் மதி காபி பார் ஆகியோர் தனக்கு பத்து லட்சம் ரூபாய் நஷ்டஈடு @கட்டு மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் சரவணக்குமார் வழக்கு தொடர்ந்தார்.

ஆராதனா புட்ஸ், மதி காபி பாரை சேர்ந்தவர்கள் விளக்கம் அளிக்க நுகர்வோர் கோர்ட் நீதிபதி ராஜகோபால், உறுப்பினர்கள் தமிழரசி, முத்துராமலிங்கம் உத்தரவிட்டனர்.

source ; Dinamalar