Nagaratharonline.com
 
திருப்பத்தூரில் பாலித்தீன் பொருள்களுக்குத் தடை  Mar 9, 11
 
திருப்பத்தூர், மார்ச் 8: திருப்பத்தூர் பேரூராட்சியில் பாலித்தீன் பொருள்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் பேரூராட்சியில் பாலித்தீன் பொருள்களுக்கு தடை விதிப்பது என பேரூராட்சிக் கூட்டத்தில் ஏற்கெனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்த்து. இது குறித்து செயல் அலுவலர் அமானுல்லா கூறியதாவது:

மாசு கட்டுப்பாடு வாரிய உத்தரவுப்படி திருப்பத்தூர் பேரூராட்சியில் பாலித்தீன் பொருள்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி பை, கப் உள்ளிட்ட பொருள்களை விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும். தடையை மீறி பொருள்களை விற்றால் மொத்த விற்பனையாளருக்கு ரூ.2500, சில்லறை வியாபாரிக்கு ரூ.750, உபயோகிப்பவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும்.

அதேபோல் குப்பைகள் வழங்கும் போது கழிவை பிரித்துத் தராவிட்டால் நிறுவனங்களுக்கு ரூ,100, தனி நபர் வீடுகளுக்கு ரூ.25 அபராதம் விதிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Source:Dinamani