Nagaratharonline.com
 
லண்டன் கோயிலுக்கு மதுரை நகைகள்  Mar 5, 11
 
லண்டன் மூடிஸ் நகரிலுள்ள முத்துமாரியம்மன் கோயிலுக்கு ஏழு லட்சம் ரூபாயில், அம்மனுக்கு தங்க பதக்கங்கள், நெற்றிப்பட்டை ஆகியன மதுரையில் செய்யப்பட்டது.கோயிலில் மூலவர் மாரியம்மனுக்கு 255 கிராம் தங்கத்தில் 619 கற்கள், முத்து, குச்சல் பதிக்கப்பட்ட இரண்டு பதங்கங்கள், நெற்றிப்பட்டை, கண்டாவலி ஆகியவற்றை புதிதாக செய்ய கோயில் தலைவர் ஜீவரத்தினம் முடிவு செய்தார்.

பதக்கங்கள் செய்யும் பொறுப்பு, மதுரை ஸ்தபதி சேதுராமனிடம் ஒப்படைக்கப்பட்டது. பணிகள் முடிந்து நேற்று லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


source : Dinamalar