Nagaratharonline.com
 
கண்டனூரில் அழகப்பா இன்போடெக் பி.பி.ஓ. மையம் துவக்க விழா  Mar 1, 11
 
காரைக்குடி, பிப். 27: காரைக்குடி அருகே, கண்டனூரில் அழகப்பா இன்போடெக் பி.பி.ஓ. மையம் துவக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சென்னையை மையமாகக் கொண்டு செயல்படும் முன்னணி நிறுவனமான நைன் ஸ்டார் தகவல் தொழில்நுட்ப மையத்தினரோடு இணைந்து செயல்படும் வகையில் அழகப்பா இன்போடெக் மையம் துவங்கப்பட்டுளளது.

இம்மையத்தை அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சேது. சுடலைமுத்து

திறந்து வைத்தார். டாக்டர் அழகப்பச் செட்டியார் கல்வி அறக்கட்டளைச்செயலர் டாக்டர் உமையாள் ராமநாதன் குத்துவிளக்கேற்றி கணினியை இயக்கி தொடக்கி வைத்தார். அழகப்பா இன்போடெக் தலைவர் ராமநாத்வைரவன் முன்னிலை வகித்தார்.

இம்மையத்தின் செயல்பாடுகள் குறித்து நைன் ஸ்டார் நிறுவன துணைத் தலைவர் சின்னிகிருஷ்ணன், அழகப்பா இன்போ டெக் நிறுவனத் தலைவர் ராமநாத்வைரவன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியது: இந்த மையம் எந்த வகை அரிய தகவல் கள் தேவைப்பட்டாலும் அதனைத்திரட்டி கோப்பு வடிவிலே வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வகையில் ஏற்பாடு செய்துள்ளோம் என்று தெரிவித்தனர். அழகப்பா பல்கலை. துணைவேந்தர் சேது. சுடலைமுத்து பேசினார். அழகப்பா பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) கே. மணிமேகலை, தேர்வாணையர் வி. மாணிக்கவாசகம், முன்னாள் எம்.பி சுப்பையா அம்பலம், அழகப்பா பல்கலை. முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் சத்தி. திருநாவுக்கரசு, அழகப்பா இன்போடெக் இயக்குநர் ஜி. நரேஷ்குமார், அழகப்பா மெட்ரிக், அழகப்பா பிரிபரேட்டரி பள்ளி ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்கள் கலந்து கொண்டனர்.

Source:Dinamani