Nagaratharonline.com
 
மகளிர் தினம்: ரூ.99-ல் உள்ளூர் விமானத்தில் பயணம்  Feb 27, 11
 
மகளிர் தினத்தன்று, ஏர் இந்தியாவின் உள்ளூர் விமானங்களில் பயணம் செய்யும் பெண்களுக்கு ரூ. 99 சலுகைக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை: மார்ச் 8-ம் தேதி பெண்கள் தினத்தன்று உள்ளூர் விமானங்களில் சாதாரண வகுப்பில் பயணம் செய்யும் பெண்கள் 4 பெண் குழந்தைகளுக்கான கட்டணம் ரூ. 99, உயர்வகுப்பில் பயணம் செய்பவர்களுக்கான கட்டணம் ரூ. 199 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பயணச்சீட்டுக்கான இதர வரிகளையும் பயணிகள் செலுத்த வேண்டும்.

ஏர் இந்தியா அலுவலகம், அங்கீகாரம் பெற்ற டிராவல் ஏஜென்டுகளிடம் இந்த பயணச்சீட்டு பெறலாம்

மேலும் விவரங்களுக்கு: www.airindia.in