Nagaratharonline.com
 
கீழச்சிவல்பட்டியில் ஸ்ரீகாசி சொர்ணலிங்கேஸ்வரர்  Feb 22, 11
 
தங்கத்தாலான ஸ்ரீகாசி சொர்ணலிங்கேஸ்வரர் லிங்கம் கீழச்சிவல்பட்டி மற்றும் அதன் சுற்றுப்புறக் கோயில்களில் வலம் வந்தது.

காசியில் உள்ள நகரத்தார் சத்திரத்தில் அமைந்துள்ள தங்க விசாலாட்சி அம்மன் சிலை அருகே பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது தங்கத்திலான ஸ்ரீகாசி சொர்ணலிங்கேஸ்வரர் லிங்கம்.

காசி நாட்டுக்கோட்டை நகரத்தார்களால் வசதி படைத்தவர்கள் தங்கப் பொருளாகவும், நிதியாகவும் அளித்த காணிக்கை கொண்டு மூன்றரை கிலோ எடை தங்கத்தில் வைரம் பதித்த ஸ்ரீ காசி சொர்ணலிங்கேஸ்வரர் லிங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த லிங்கம் பக்தர்கள் வழிபாட்டுக்குப் பின்னர் மார்ச் 2 ஆம் தேதி மகா சிவராத்திரி நாளன்று காசியில் வெள்ளி சிம்மாசன கேடயத்தில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது.

இந்த லிங்கம் பிள்ளையார்பட்டியில் இருந்து பக்தர்களின் தரிசனத்துக்காகப் புறப்பட்டு, 76 ஊர் நகரத்தார் கோயில்களில் லிங்க வழிபாடு நடத்தப்பட்டு, வலம் வருகிறது.

காரைக்குடி தேவகோட்டை, அலவாக்கோட்டை, வைரவன்பட்டி, கீழச்சிவல்பட்டி உள்ளிட்ட பகுதி நகர சிவன் கோயில்களில் லிங்கம் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டு, பொதுமக்கள் மற்றும் நகரத்தார்கள் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திரண்டு வந்து தரிசனம் செய்தனர்.


source : Dinamani