Nagaratharonline.com
 
வைரவன்பட்டியில் சொர்ணலிங்கேஸ்வரர்  Feb 21, 11
 
காசியில் பிரதிஷ்டை செய்ய உள்ள தங்க சொர்ணலிங்கம், என்.வைரவன்பட்டி வயிரவர் கோயிலுக்கு நாளை வரவுள்ளது. நாட்டுக்கோட்டை நகரத்தாரால் 400 பவுன் தங்கத்தால் சொர்ணலிங்கம் செய்யப்பட்டுள்ளது. ஒன்பது நகரத்தார் கோயில், 76 ஊர் சிவன் கோயில்களுக்கு சென்று விட்டு, காசிக்கு கொண்டு செல்லப்படும்.

நாளை மாலை 6 முதல் இரவு 8 மணி வரை, வைரவன்பட்டியில் லிங்கம் வைக்கப்படும். காசி நாட்டுக்கோட்டை நகரத்தார் மேலாண்மை கழக தலைவர் சிதம்பரம், நிர்வாகிகள் அழகப்பன், முத்தையா, ராஜகோபால், முத்து பழனியப்பன், ராமனாதன், வயிரவன் ஏற்பாடுகளை செய்கின்றனர்

source : Dinamalar