Nagaratharonline.com
 
தேவகோட்டை பக்தர்கள் காசிக்கு பாதயாத்திரை  Feb 20, 11
 
தேவகோட்டையை சேர்ந்த ராமேஸ்வரம் காசி பாதயாத்திரை குழுவினர், ஐந்தாவது ஆண்டாக ராமேஸ்வரத்திலிருந்து காசிக்குநேற்று நான்கு மாத பாதயாத்திரையை துவங்கினர்.

இதையொட்டி ராமேஸ்வரம் வந்த பக்தர்கள் அக்னிதீர்த்த கடல் , கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களிலும் நீராடி ராமநாதசுவாமி, பர்வதவர்த்தனி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். தொடர்ந்து கோடி தீர்த்தம் மற்றும் கடற்கரை மணலை சேகரித்து ராமநாதசுவாமி கோயில் முன்பிருந்து, குழுத்தலைவர் தட்சிணாமூர்த்தி தலைமையில் காசி பாதயாத்திரையை துவங்கி, கர்நாடகா, ஆந்திரா,மகாராஷ்டிரா,மத்தியபிரதேசம், உத்தரப்பிரதேசம் மாநிலங்கள் வழியாக 4 மாதத்தில் 3 ஆயிரம் கி.மீ., நடந்து 40 புண்ணிய தீர்த்தங்களில் நீராடி விந்தியசாத்பூரா மலையை கடந்து, வரும் ஜூன் 13 ல் காசியை சென்றடைந்து விஸ்வநாதரை வழிபடுவோம்,'' என, பாதயாத்திரைக்குழு தலைவர் தட்சிணாமூர்த்தி தெரிவித்தார்.

source : Dinamalar