Nagaratharonline.com
 
இலவச 'டிவி' வழங்கல்  Oct 29, 09
 
சிங்கம்புணரி : எஸ்.புதூர் ஒன்றியம் கிழவயலில் இலவச "டிவி' வழங்கும் விழா நடந்தது. அமைச்சர் பெரியகருப்பன் தலைமை வகித்தார். ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜெகநாதன் முன்னிலை வகித்தார். கிழவயல், சேர்வைகாரன்பட்டி, பொன்னடப்பட்டி, நல்லவன்பட்டி, மணியக்காரன்பட்டி கிராமத்தினருக்கு அமைச்சர் வழங்கினார். மாவட்ட அவை தலைவர் வைத்தியநாதன், ஒன்றிய கவுன்சிலர் ரமணி, தாசில்தார் விஜயராணி, பி.டி.ஒ., க்கள் சின்னப்பன், கமால்பாட்சா, ஆர்.ஐ., ராஜேந்திரன் பங்கேற்றனர்.

Source: Dinamalar 29/10/09